<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

திருக்கேதீஸ்வரத்தில் தோண்ட தோண்ட அதிகரிக்கும் மனித எச்சங்கள்


 
 
 --அன்புடன் றின்ஸாத்--
 
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி ஒன்று கண்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் நடத்தப்பட்ட மனித எச்சங்களை தேடும் பணியின் போது 10ற்க்கும் மேற்பட்ட மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்படடிருந்தது.
இதனை தொடர்நது இன்று 28ம் திகதி சனிக்கிழமை குறித்த மனித எச்சங்களை தேடிகண்டுபிடிக்கும் பணி இனறு காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நிதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நடைபெற்றது.

இதன் போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்றது. இதன் போது மேலும் சில மனித உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை மனித எச்சங்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறித்த மனித எச்சங்களை தேடும் பணிகளுக்கென அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரி டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையில் டி.எல்.வைத்திய ரெட்ண உள்ளிட்ட 5து சட்டவைத்திய நிபுணர்கள் பகுப்பாய்விற் கென பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு பெரதேனிய பல்கலைக்களக பகுப்பாய்வு அதிகாரி கே.நந்தசேன இதொல் பொருள் தணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின உள்ளிட்ட பல துறைசார் நிபுணபர்கள் எச்சங்களை கண்டெடுத்து பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகளை செய்யும் பணிகளில் தொடர்ந்த ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிகிழமை மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளது. மாந்தை சந்தியிலிருந்து தீருக்கோதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நீர் வடிகாலமைப்பிற்காக தண்ணீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடைபெற்றுள்ளது.
இதன் போது வீதியின் அருகில் குழாய்கள் பதிப்பதற்கான வேலைகள் செய்வதற்கென நிலம் ஆளமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது நிலத்திற்கடியில் மனித எலும்பு எச்சங்கள் சில கணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பாக தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்தவிடயம் மன்னார் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டள்ளது.
இதனை அடுத்து குறித்த பகுதியிற்கு சென்ற பொலிசார் விசாரனைகளை மேற்கெண்டுடிருந்தினர்
குறித்த பகுதியில் பல மனித எலும்பு எச்சங்கள் மேலும் மீட்க்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை (21) காலை குறித்த இடத்திற்கு சென்ற மன்னார் மாவட்ட நிதிபதி ஆனந்தி கனகரெட்ணம் சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டார்
இதன் போது மனித எச்சங்களை அகழ்ந்து எடுக்கும் பணிகள் விசேட தடயங்களை கண்டறியும் பொலிசாரின் உதவியுடன் குறித்த பகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன் பொது மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடிகண்டுபிடிக்கும் தீவிரபடத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (22)காலை மன்னார் மாவட்ட நிதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் மனித எச்சங்களை தேடும் பணி தொடர்தது நடைபெற்றது.
இதன்போது குறித்த பகுதியில் மொத்தமாக 10 மனித எலும்புகூடுகளின் பாகங்கள் மீட்க்கப்படடீருந்தது.
இன்நிலையில் கடந்த திங்கழ்கிழமை(23) குறித்த மனித எச்சங்கள் தொடர்பான விசாரனையினை மேற்கொள்வதற்கு அமைவாக உதவ அனுராதபுரத்திலிருந்து மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய ரெட்ண அழைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த விசாரனையினை மன்னார் மாவட்ட நிதிபதி ஆனந்தி கனகரெட்ணம் மேற்கொணடார்.
இதன்போது குறித்த மரணவிசாரானைகளுக்கு உதவியாக அதிகாரியின் அறிக்கை மற்றும் விதி அபிவிருத்தி அதிகாரசபையின் எந்திரி ஜிப்றி அவர்களின் அறிக்கைகள் என்பன கவனத்தில் எடுத்து கொண்ட நிதிபதி குறித்த விசாரனைகளை எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி நடத்தப்படுவதோடு குறித்த திகத்தில் மனிதஎச்சங்களை தேடுமடபணி தொடர்வதற்க உத்தரவிட்டார்
இன்நிலையில் இன்று 28ம் திகதி சனிக்கிழமை குறித்த மனித எச்சங்களை தேடிகண்டுபிடிக்கும் பணி இன்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நிதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நடைபெற்றது
இதன் போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்றது. இதன் போது மேலும் சில மனித உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக 11 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது
இதேவேளை மனித எச்சங்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு நாளை காலை 7 மணிக்கு எச்சங்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் தொடரவுள்ளது
இதேவேளை குறித்த பகுதியிற்கு இன்று சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் குறித்த பகதியை நேரில் சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger