போதைப்பொருள் கடத்தலின் தேசிய சின்னமாக பர்தா மாறி விட்டது: பொதுபலசேனா
இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.
இலங்கையில் இன்று முஸ்லிம் அடையாளங்களை வைத்தே போதைப்பொருள்
கடத்தல்கள் இடம்பெறுகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும்
பர்தா, ஹபாயா ஆடைகளை அணிந்து கொண்டே இலங்கைக்குள் போதைப்பொருட்களை
எடுத்து வருகின்றனர். மதத்தினை காரணமாகவும் அவர்களின் மத
அடையாளங்களை வைத்துக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது
தடுக்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களை சாட்டி ஏனையோர் இவ்வாறு செயற்படுவதனால் முஸ்லிம்
மதத்திற்கும் அச் சமூகத்தினருக்கும் அவப் பெயரை
ஏற்படுத்துகின்றது. அதேபோல் முஸ்லிம் தீவிரவாத கொள்கை உடையவர்கள்
இவ்வாறு செயற்படுவதனால் இலங்கையில் ஏனைய மதத்தவர்களுடன் வாழும்
முஸ்லிம் மக்களையும் தவறான எண்ணத்தில் சித்திரிக்கும் நிலை
காணப்படுகின்றது.
மத கொள்கைகளை விடவும் தேசிய பாதுகாப்பே முக்கியமாகும். பெளத்தர்கள்
இந்துக்கள் எவ்வாறு வாழ்கின்றனரோ அதேபோல் முஸ்லிம்களும் வாழ
வேண்டும்.
தீவிரவாதப்போக்கினை இலங்கையில் பரப்பி இலங்கையையும் மத்திய கிழக்கு நாடுகளின் பட்டியலில் இணைத்து விடக்கூடாது.
மேலும் இலங்கையில் இன்று அதிகளவிலான போதைப்பொருள் கொள்கலன்கள்
சிக்குவதற்கும் அரசியலில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கும்
முஸ்லிம் தீவிரவாதமே பிரதான காரணமாகும். மத்திய கிழக்கு
நாடுகளுடன் உறவுகளை வைத்திருக்கும் இலங்கை முஸ்லிம்கள் அந்
நாடுகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி இலங்கையில் இளைஞர்களின்
மத்தியில் பரப்புகின்றனர். இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியிலும்
இளம் சமூகத்தினர் மத்தியிலும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து
விட்டது.
சர்வதேச சூதாட்டக்காரர்களிடம் இருந்து கசினோவினை தடை செய்ய
முன்னர் முஸ்லிம்களின் நிக்காப் பர்தா ஆடைகளையும் மத்திய கிழக்கில்
இருந்து வரும் முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் அதிகாரத்தினை அவசியமான இடத்தில் பயன்படுத்தாவிடின் இலங்கை எதிர்காலத்தில் முஸ்லிம் நாடாக மாறிவிடும்.
இலங்கைக்கென இருக்கும் பெளத்த இலட்சினைகளை பெளத்தர்களே பாதுகாக்க
வேண்டும். விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியது போல்
முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்தும் இலங்கையை காப்பாற்ற வேண்டும்.
ஆயுதம் ஏந்தி போராடுவதை விடவும் மோசமானதே மத வாதம். மத மாற்றத்தினூடாக
இலங்கையினை முஸ்லிம் நாடாக மாற்றுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்
எனவும் அவர் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment