11வயதில் பட்டதாரி ; இலங்கைச் சிறுமிஉலக சாதனை
ஒன்பது
வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை
படைத்த சிறுமி வஷினியா பிரேமானந்த் , தனது 11 வயதில் தகவல் தொழில்நுட்பத்
துறையில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தைப் பெற்று
தாய் மண்ணுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.
இந்தச்
சிறுமிபொம்மைகளுடனும் விளையாட்டுப் பொருட்களுடனும் அதிக காலத்தைச்
செலவிட்டுப் பொழுது போக்காமல் கூடுதலான காலத்தை தகவல் தொழில்நுட்பப்
பாடத்துறையில் செலவிட்டு அயராது முயற்சி செய்து சாதனை படைத்துள்ளார்.
பிரேமானந்த
நடராஜ் மற்றும் லக்ஷி பிரேமானந்த் தம்பதிகளின் ஒரே ஒரு புதல்வியான வஷினியா
கண்டியிலுள்ள கொழும்பு சர்வதேச பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி
பயிலுகின்றார்.
வஷினியா
2002 -05-13 ஆம் திகதி பிறந்தவர். தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக
பிரித்தானிய கணினித் துறை கற்கை நெறிச் சங்கத்தின் பட்டதாரியாக (BCS IT
DEGREE ) பூர்த்தி செய்துள்ளார்.
இவருக்கான
பட்டமளிப்பு விழா இங்கிலாந்து கல்வி நிலையத்தினால் எதிர்வரும் 2014 ஆம்
ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
இந்தச்
சாதனை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகிற்குமுரியதாகும். இந்தப் பட்டப்
படிப்பு தொடர்பான பெறுபேறு இணையத்தளத்தின் ஊடாக 12-12-2013 வியாழக்கிழமை
வெளியாகியது.
சிறுமி
தன்னுடைய மூன்று வயதிலேயே மின்னஞ்சல் முகவரியைத் திறந்து கொண்டார்.
சர்வதேச கணினியியல் டிப்ளோமா கற்கை நெறியில் சான்றிதழ் பெற்றுள்ளார்.
வணிகம் , இணையத் தள , பொறியியல் துறைகளில் சர்வதேச தரச் சான்றிதழ்களை
தன்னுடைய ஒன்பது வயதிலேயே பெற்றுள்ளார். (தகவல் : அத தெரண)
WAD





0 comments:
Post a Comment