முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை: இருபதுக்கு 20 தொடரை சமப்படுத்துமா?
இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்ஷான் மற்றும் குஷல் பெரேரா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
தற்போது இலங்கை அணி 09 ஓவர் முடிவில் 90 ஓட்டங்களை எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி பெற்று மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் இரண்டு, இருபதுக்கு 20 மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை களமிறங்கியுள்ளது.





0 comments:
Post a Comment