<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

பிரதேசவாதத்தை தூண்டும் ஷிராஸுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கல்முனை பொது அமைப்புக்கள்


கல்முனையை இனவாதிகளுடன் சேர்ந்து கூறுபோட முன்னால் மேயர் ஷிராஸ் துவேச வார்த்தைகளால்  பிரதேசவாதத்தை தூண்டும் விதத்தில் கல்முனை மக்களிடத்தில்  கோசம் எழுப்பியதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்முனை பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதவது,,,

மாநகர சபை வளாகத்தினுள் இடம் பெற்ற இவ் அசம்பாவிதமானது சிராஸின் பழி தீர்க்கும் நடவடிக்கையாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும் கல்முனை பிரதேச வாழ் மக்களால் உற்று நோக்கப்படுகின்றது.
கேவலம் பதவிக்காக தான் கொடுத்த வாக்கை கூட மீறிய அவர் சுயநல அரசியலுக்காக பிரதேசவாதத்தை தூண்டி பின்னர் தனது மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார் அதுவும் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைக்க வேண்டுமென்ற நோக்கமே தவிர மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கமில்லை.
தற்போதைய நிலையில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்கட்சியுடனும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பச்சோந்திகள் சிலருடனும் சேர்ந்து அத்திட்டத்தை தோக்கடித்து முதல்வர் நிசாம் காரியப்பரை பதவியில் இருந்து தூக்குவதற்கு செய்த சூழ்ச்சியே இதுவாகும்.
இந்த வரவு செலவு திட்டம் தோக்கடிக்கப்படுமானால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம் என்ற கீழ்த்தரமான நோக்கமே தவிர வேறில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இது பெரும் சவால் இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடருமாக இருந்தால் நயவஞ்சக சிராஸை  கட்சியில் இருந்து முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பது கல்முனை வாழ் மக்களின் வினயமான வேண்டு கோளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இவ்விடயத்தில் தலையிட்டு வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் உறுப்பினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விட்டு அதை நடை முறைப்படுத்தவேண்டும் என்றும் பிரதேச வாழ் பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள்,கல்முனை வர்த்தக சம்மேளனம் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger