<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

தாய் நாட்டின் தேசியக் கொடியை எவரும் அவமரியாதை செய்யக்கூடாது. அரசு தெரிவிப்பு.






தேசியக் கொடிக்கு எவரும் அவமரியாதை செய்யக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பீ அபேகோன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையைச் சேர்ந்த சில அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வேண்டுமென்றே தேசிய கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேசிய கொடி தொடர்பில் ஏற்கனவே சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்று நிரூபத்திற்கு மேலதிகமாக புதிதாக சுற்று நிரூபமொன்று நினைவூட்டும் வகையில் வெளியிடப்பட உள்ளது. அரசியல் அமைப்பை பேணுவதாகத் தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வட மாகாண அரசியல்வாதிகள் அதற்கு முரணாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்துமாறு அமைச்சர்.ஜோன் செனவிரட்ன தமக்கு ஆலோசனை வழங்கியதாக அபேகோன் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த தேசிய கொடியை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தேசிய கொடி ஏற்றல் தொடர்பிலான வழிகாட்டல்கள் மாகாண ஆளுனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடியின் பயன்பாடு குறித்து வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வட மாகாணசபையின் உறுப்பினர்கள் தேசியக் கொடியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு பொதுநிர்வாக அமைச்சு, ஆளுநரை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய கொடிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் எவரும் செயற்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேசியக் கொடிக்கு அபகீர்த்தி ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் திட்டமிட்டு தேசிய கொடியை அவமரியாதை செய்த சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள  அமைச்சின் செயலாளர். தேசிய கொடி பயன்பாடு குறித்த அரசாங்க சுற்று நிருபம் மீளவும் நினைவூட்டப்பட உள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger