கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட செயலமர்வு
கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட செயலமர்வு நேற்று முன்தினம் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
'நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞர்களின் கையில்' என்ற தலைப்பிலான செயலமர்வு பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்டது. இதில் பிரிவுரிதியாக தெரிவு செய்யப்பட இளைஞர்கள் கலந்து கொண்டனர் .
சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எ.ஆர்.எம் ஸாலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபுல்யு.ஏ.கபார், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் எ.சி .அன்வர் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.





0 comments:
Post a Comment