கவனிப்பாரற்று கிடக்கும் கல்முனை நகர மண்டபம் - மாநகர முதல்வரே இது உங்களின் கவனத்திற்கு
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு, காலம் சென்ற பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட கல்முனை நகர மண்டபம் கவனிப்பாரற்று கிடக்கின்றது.
முன்னாள் மேயர் சிராஸின் பதவிக் காலத்தில் கடந்த ஆண்டு முற்பகுதியில் இதன் புனரமைப்புக்காக இருபது லட்சம் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும் அதில் பெயிண்ட் மட்டுமே பூசப்பட்டுள்ளது. ஏனைய திருத்த வேலைகள் நடந்ததாக தெரியவில்லை.
அதனால் இந்த மண்டபம் மக்கள் பாவனைக்கு விடப்படாமல் மீண்டும் பாழடைந்து கிடக்கிறது.
இதன் காரணமாக இந்த மண்டபம் மக்களுக்கு பயனளிக்காமல் இருக்கின்ற அதேவேளை மாநகர சபையினால் இருபது லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டும் கூட மாநகர சபைக்கு இதனால் ஒரு சதம் கூட வருமானம் கிடைக்காமல் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே கடந்த மேயரின் ஆட்சியில் மாநகர சபையின் கூட்டங்களில் மேற்படி மண்டபம் அபிவிருத்தி செய்யப்பட வில்லை எனக்கூறி முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களை அழைத்துச் சென்று காட்டி மேற்படி இருபது இலட்சம் ரூபாவினை குறித்த வேலைக்காகப் பெற்று அதில் 1/3 பங்கினை செலவு செய்து விட்டு இரண்டு பங்கினை ஏப்பமிட்ட கௌரவ மாநகர சபை உறுப்பினர் இதனைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா?
மாநகர முதல்வரே இது உங்களின் கவனத்திற்கு…





0 comments:
Post a Comment