காவத்தமுனையில் இளவயதுத் திருமணம், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கெதிராக ஊர்வலம்
காவத்தமுனையில் இளவயதுத் திருமணம், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கெதிராக ஊர்வலம்
சிறு பராயத் திருமணத்தை தடுக்கும் நோக்கிலும் பாலியல் துஸ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் ஓட்டமாவடி காவத்தமுனையில்08.01.204 புதன் கிழமை இடம் பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்த ஊர்வலம் காவத்தமுனை ஜூம்மா பள்ளிவாயல் சந்தியிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியினூடாக காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம் வரை சென்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் இடம் பெற்ற இவ்வூர்வலத்தில்
பாடசாலை மாணவர்கள், பிரதேச மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிறு வயது திருமணம் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்களினால் ஏற்படும் சமூகச் சீரழிவுகள், உள, சமூகப் பாதிப்புக்கள், உடல் நிலை பாதிப்பு, குறைந்த வயதில் கர்ப்பமடைவதால் ஏற்படும் தீமைகள், திருமணத்திற்கு முன் பாலியல் தொடர்புகளால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய பதாதைகளையும் ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் எடுத்துச் சென்றனர்.











0 comments:
Post a Comment