உணவு ஒவ்வாமையால் 100 பெண்கள் வைத்தியசாலையில்
ஹொரண - பொருவதன்ட பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக ஆடை தொழிற்சாலை பெண் ஊழியர்கள் நூறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று (02) காலை ஹொரண ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று (01) இரவு குறித்த ஊழியர்கள் உட்கொண்ட உணவே ஒவ்வாது போயுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
உணவு உட்கொண்டவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, தலைசுற்று போன்றவை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 comments:
Post a Comment