ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (36) சதமடித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார் நியுஸிலாந்து அணியின் கொரே அன்டர்ஸன்.
1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சயிட்
அப்ர்டி குறைந்த பந்துகளில் (37) சதமடித்த சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
அந்தச் சாதனையையே கொரே அன்டர்ஸன் இன்று முறியடித்தார்.
நியுஸிலாந்து குயின்ரவுடன் மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்திய
தீவுகள்- நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டியிலே
இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
மழை காரணமாக இப்போட்டி 21 ஓவர்களைக் கொண்டதாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment