ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை
ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தை
அமுல் படுத்தியதன் பின்னர், இந்த பரிந்துரை முன் வைக்கப்படும் என தேசிய
கல்வி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புலமைப் பரிசில் பரீட்சை ஒரு வினாத்
தாளில் மாத்திரமே வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது தவிர, பரீட்சைக்காக ஒரு மணி நேரம்
மாத்திரமே ஒதுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது,
ஒகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் இந்த பரீட்சை, வருட இறுதியில் நடத்தப்படும்
வகுப்பேற்ற பரீட்சையின் போதே நடத்தப்பட வேண்டும் எனவும் தேசிய கல்வி
ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது
தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என என கல்வி
அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.




