கல்முனையில் 5 மாதங்களின் பின் ஜனாஸா தோண்டியெடுப்பு

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக் குடியில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா ஒன்று தோண்டி எடுக்கப்படடது.
இது தொடர்பாக தெரியவருவதாவது கல்முனை குடி 11 காசிம் வீதியில் வசித்த 18
வயதுடைய முகம்மது ஹனிபா அஸ்ரின் என்பவர் 2013.07.13 அன்று மரணமாகி அன்றைய
தினம் பிற்பகல் அவரது ஜனாஸா நூரானியாத் தைக்கா மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
இந்த மரணம் இயற்கை மரணம் அல்லவென்றும் கொலை செய்யப்பட்டு அடக்கம்
செய்யபட்டதாகவும் தெரிவித்து ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா
அதிபர் ஆகியோருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து
இவ்விடயத்தை விசாரிக்க கல்முனை பொலிசார், கல்முனை நீதிவான் நீதிமன்ற
நீதிபதியின் அனுமதியை பெற்றுள்ளனர். நீதிபதி அன்டனி ஜூட்சன் அவர்களின்
உத்தரவுக்கமைய அவரது முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி, கிராமசேவகர்,
மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் இன்று காலை 10.00 மணிக்கு இந்த
ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டு, சோதனைக்காக , கொண்டு










0 comments:
Post a Comment