ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்த முயன்ற 8 வயது சிறுமி
ஆப்கானிஸ்தானில் குண்டுகள்
பொருத்தப்பட்டிருந்த தற்கொலை மேலங்கியொன்றை அணிந்து தாக்குதலை நடத்த
முயற்சித்த 8 வயது சிறுமியொருவரை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது
செய்துள்ளனர்.
தென் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆப்கான் பொலிஸாருக்கு எதிராக தாக்குதலை நடத்த முயன்ற வேளையிலேயே அந்த சிறுமி பிடிபட்டுள்ளார்.
ஸ்பொஸ்மே என்றழைக்கப்படும் மேற்படி சிறுமி, தனது சகோதரர் தலிபான் கட்டளைத்
தளபதியெனவும் அவரே தன்னை தாக்குதலை நடத்த அனுப்பியதாகவும்
தெரிவித்துள்ளார்.
தம்மால் பிடிக்கப்பட்ட போது அந்த சிறுமி கடும் அதிர்ச்சிக்கும் குழப்ப
நிலைக்கும் உள்ளான நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






0 comments:
Post a Comment