<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »
 ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் நெனசல அறிவகத்தில் CCA பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று (12.01.2014) சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. நிந்தவூர் பெஸ்ட் ஒப் யன்க் அமைப்பின் தலைவர் SM நிஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெவ்வை, கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் MS அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் SLM சலீம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் AMM ஜாபிர், நெனசல திட்டத்தின் வடகிழக்கு இணைப்பாளர் SM அமீர் பாரூக், நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் M கலந்தர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் மதீனா பாடசாலையின் அதிபர் S அஹமது மற்றும் கல்விமான்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 
இந்நிகழ்வின் இறுதியில் நெனசல அறிவகத்தில் CCA பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 80 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதேவேளை புதிதாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளராக நியமனம் பெற்ற MS அப்துல் ஜலீல் அவர்களுக்கு நெனசல அறிவகம் சார்பாக பொன்னாடையும் போர்த்தி கெளரவிக்கப்பட்டது.





Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger