அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் பேதங்களை மறந்து ஓரணியில் இணைய வேண்டும்-மங்கள
எதிர்வரும் ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தலையும் அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு அரசாங்கம் இரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இத்தருணத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சிகளும் பேதங்களை மறந்து ஓரணியில் இணைய வேண்டுமென மாத்தறை மாவட்ட ஐ..தே.கட்சி எம்.பி. மங்கள சமரவீர தெரிவித்தார்.
கம்பியூட்டர் ஜில்மாட் என்பது அரசாங்கத்தின் மக்களை ஏமாற்றம் யுக்தியாகும். இது உண்மையாக இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஏன் வெற்றிபெற முடியாமல் போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிரிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மங்கள சமரவீர எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
2014ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக அமையப்போகின்றது. மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை நாம் தயாரித்துள்ளோம்.
அதேவேளை, நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தலை ஜூன் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு இரகசியமாக திட்டங்கள் தயாரிக்கப்படுவதோடு இது தொடர்பில் அரசாங்கம் இரகசியமாக பேச்சுக்களை நடத்தி வருகிறது.
மாகாண சபை தேர்தலில் கட்சிகள் தனித் தனியார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ஜே.வி.பி.யினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் அரசியல் பேதங்களை மறந்து ஓரணியில் இணைய வேண்டும்.
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலில் இந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும்.





0 comments:
Post a Comment