சல்மான் கானுடன் ஓடிப்போகவும் தயார்! த்ரிஷா அதிர்ச்சி பேட்டி
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அவருக்கு மட்டுமின்றி ஜீவா, ஆண்ட்ரியா, வினய் ஆகியோருக்கும் இந்த படம் ஒரு நல்ல களத்தை கொடுத்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டியளித்த ஜீவா மற்றும் த்ரிஷா, என்றென்றும் புன்னகை படத்தின் போது தங்களுக்கேற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது தொலைக்காட்சி வர்ணனையாளர், த்ரிஷாவிடம் இதுவரை உங்களை காதலிப்பதாக எத்தனை பேர் புரபோஸ் செய்துள்ளார்கள் என்று கேட்டதற்கு ´த்ரிஷா சிரித்துக்கொண்டே அதை நான் கணக்கில் வைத்துக்கொண்டதில்லை" என்று கூறினார்.
நீங்கள் யாரையாவது புரபோஸ் செய்தது உண்டா? என்ற கேள்விக்கு ´அவற்றிற்கு கணக்கில்லை" என்று கூறியதை கேட்டு அருகிலிருந்த ஜீவா இன்ப அதிர்ச்சியானார்.
பின்னர் தற்போது நீங்கள் காதலிப்பதாக இருந்தால் உங்கள் தெரிவு யார் என்று கேட்டதற்கு த்ரிஷா சற்றும் யோசிக்காமல் "சல்மான்கான் தான் என்னுடைய ஹீரோ. 47 வயதானாலும் இன்னும் அவர் இளைஞர்தான். என் சிறுவயது ஹீரோ சல்மான்கான் தான். அவர் ஓகே என்றால் அவரை காதலிக்க நான் தயார். எங்கள் வீட்டில் சம்மதிக்காவிட்டாலும் சல்மான்கானுடன் ஓடிப்போகக் கூட தயார் என்று த்ரிஷா கூறியபோது அனைவரும் அதிர்ந்தனர்.





0 comments:
Post a Comment