<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட பணிப்பாளர் நாயகம் கல்முனைக்கு விஜயம்

--------------------------------------------------------------------------------
HMM Harees's photo.HMM Harees's photo.HMM Harees's photo.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி எனது வேண்டுகோளுக்கினங்க கல்முனை பிரதேசத்தில் எனது முயற்சியால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட மக்களுக்காக எனது முயற்சியால் மேற்கொள்ளப்படும் 52 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் கல்முனைக்குடி கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம், மருதமுனை மோட்டு வட்டை பிரான்ஸ் சிட்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிட்டார்.

மேலும் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரித்து தொகுதியின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரூடாக அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ. குமாரசிறி சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை கேட்டுக்கொண்டதுடன் இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மாவட்ட பொறியியலாளர் எம்.ஐ.ஏ.றாசிக் மற்றும் எனது பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.ஜின்னாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.அமீர், எனது இணைப்பாளர்களான எம்.ஹமீட், நௌபர் ஏ.பாவா ஆகியோரும் சென்றிருந்தனர்.
HMM Harees's photo.HMM Harees's photo.
HMM Harees's photo.



Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger