அக்கரைப்பற்று வாகன விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்!
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான வாகனமொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயத்திற்குள்ளான நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





0 comments:
Post a Comment