<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்முனை மாநகர நெடுஞ்சாலையில் மின்னொளி திட்டம் ஆரம்பம்!

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையை மின்னொளியூட்டி -பிரகாசப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் இப்புதிய திட்டத்தின் கீழ் மாநகரப் பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியில் அனைத்து இடங்களிலும் புதிய மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டம் நேற்று கல்முனை தாளவட்டான் சந்தியில் இருந்து முதல்வரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பறக்கத்துள்லாஹ், எம்.கமலநாதன், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக், பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.சத்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர நெடுஞ்சாலையின் பல இடங்கள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியிருப்பதாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
20140114-154007.jpg
20140114-154012.jpg
20140114-154017.jpg

Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger