சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழர் தூக்கு தண்டனையிலிருந்து அதிர்ஷ்ட வசமாகத் தப்பித்துள்ளார். சட்ட திருத்தத்தால் இவர் பலன் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் தமிழ் வாலிபர் பிரகாசம் (29). இவரது தந்தை சுபாஷ்கரன்.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 186.62 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியபோது பிரகாசம் பிடிபட்டார்.
இவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரகாசத்துக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் அவரது தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை தொடர்பான சட்டத்தை சிங்கப்பூர் அரசு திருத்தியது. அதன்படி, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மரண தண்டனைக்கு பதிலாக நீதிபதிகள் விரும்பினால் அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆயுள் தண்டனையும், கசையடி கொடுக்கவும் உத்தரவிடலாம் என கூறப்பட்டுள்ளது.





0 comments:
Post a Comment