<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

தொழில் உத்தரவாதம்: பாதுகாப்பு தொடர்பில் இலங்கை – சவூதி ஒப்பந்தம்


Flag-Pins-Sri-Lanka-Saudi-Arabiaகொழும்பு: வேலைவாய்ப்புகளுக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசு சவூதி அரசுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளவுள்ளது.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 14ம் திகதி சவூதியில் கைச்சாத்தாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
அமைச்சர் டிலான் பெரேரா, பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார மற்றும் அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க விஜேரட்ண உட்பட பணியகத்தின் அதிகாரிகள் 12 ஆம் திகதியில் சவூதி செல்லவுள்ளனர்.
வீட்டுப் பணியாளர்களாக செல்லும் ஆண், பெண் இருசாராரினதும் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உறுதி மருத்துவம் போன்ற ஆறு வகையான உடன் படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாக பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
சவூதி வேலைவாய்ப்புகளுக்காக மனித வளத்தை அனுப்பும் இலங்கை இந்தியா மட்டுமல்லாது மனித வளத்தை நேபாளம், இந்தோனேஷியா, வியட்னாம், கம்போடியா, பிலிப்பைன் போன்ற நாடுகளுடனும் சவூதி அரசு இவ்வாறான ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger