கரையோர பகுதிகளில் வாழும் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
mohamed rinsath
திருகோணமலைக்கு கிழக்கே 150 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்
இன்று யாழ் குடாநாடு அல்லது அதனை அண்மித்த பகுதியூடான நகரும் என
எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனால் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவதானமாக இருக்கவேண்டும் என
வானிலை தொடர்பாடல் பொறுப்பதிகாரி லக்ஸ்மி லத்தீவ் தெரிவித்துள்ளார்.
தாழமுக்கம் வலுடைந்து யாழ்ப்பாணம் ஊடாக நகரும் அபாயத்தினால் மாவட்டத்தின்
கரையோரங்களில் 100 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார்.
இந்த முன்னெச்சரிக்கை தொடர்பில் ஒலிபெருக்கிகள் ஊடாக மக்களுக்கு தகவல் வழங்கப்படுவதாகவும் அவர் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளின் ஊடாக இந்த
நடவடிக்கை ஒருங்கிணைக்கப்படுவதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையிலிருந்து 100 மீற்றருக்கு
உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும்
நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்
நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார்.
இதனிடையே மக்களை தெளிவூட்டும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.






0 comments:
Post a Comment