<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

சிங்களவர்களாகிய நாம் கற்கவேண்டியது குர்ஆனில் நிறையவே உண்டு :

153நோலிமிட் (NOLIMIT) நிறுவனம்  பாணந்துறை அரச வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபா செலவில்  வார்ட் ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. மேலும்  அவ் வாட்டினை முகாமைத்துவ செலவினையும் ஆயுட்கால அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல்மாகண சுகாதார அமைச்சர் ஜகத் அகங்ககே இவ் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றுகையில் இஸ்லாம் ஒர் சிறந்த மார்க்கம் எனக்கு அல் குர்ஆன்  மொழிபெயர்ப்பு ஒன்று   கிடைத்தது. அதன் ஒரு பகுதியை வாசித்துள்ளேன். அதில் சிங்களவர்கள் நிறைய படித்துக் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியாகவே தான் உழைத்த வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வழங்குவது, அது வலதுகையால் கொடுப்பது இட கைக்கு தெரியாமல் இருக்க வேண்டும். அதில் ஒர் அங்கமாகவே நோலிமிட் முதலாலி பாணந்துறை வைத்தியசாலைக்கு செய்துள்ள அண்பளிப்பாகும். இது நமக்கு  ஓர் உதாரணமாகும்.
நோலிமிட் இதுபோன்ற வைத்தியசாலைத் திட்டங்களை நீர்கொழும்பு வைத்தியசாலை, மகரகம புற்றநோய் வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை பாணந்துறை வைத்தியசாலை ஆகியவற்றுக்கு   செய்து வருகின்றது. இதுபோன்ற செயற்பாடுகள் தமது சிங்கள சமுகத்தில் உள்ள வர்த்தகர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மேல் மாகாண சுகாதார அமைச்சர் தனது உரையில் கூறினார்.
154
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger