<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »
கணவன் செக்ஸ் தொல்லை: புது மனைவி தற்கொலை

கணவன் செக்ஸ் தொல்லை: புது மனைவி தற்கொலை


கணவனின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் திருமணமான 4 மாதங்களிலேயே புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள சில்லமரத்துப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுருளிச்சாமி மகள் பிரியா (வயது 22). இவருக்கும் வருசநாடு அருகில் உள்ள குமணன்தொழுவை சேர்ந்த கார்த்தி (25) என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

பிரியா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு வந்து விடுவார். அவரது பெற்றோர்கள் கேட்டபோது, கணவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த வாரம் சுருளிச்சாமி தேனி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கார்த்தி மனைவி பிரியாவை ஆபாசமாக படம் எடுத்து டார்ச்சர் செய்து வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த புகாரை தேனி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த பிரியா அருகில் உள்ள ஒரு தனியார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போடி தாலுகா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு வைத்தியசாலைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜானகி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
 கணவன் செக்ஸ் தொல்லை: புது மனைவி தற்கொலை
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger