<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

அம்பாறை மாவட்ட அரச உத்தியோகத்தர்களிற்கு எதிர்வரும் ஜனவரியில் இடமாற்றம்



அம்பாறை மாவட்டத்திலுள்ள 162 அரச உத்தியோகத்தர்களிற்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழுள்ள அரச உத்தியோகத்தர்களிற்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்ற அறிவிப்பு அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் ஜனவரி 16ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மாவட்ட செயலகம், பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, கல்முனை தமிழ் பிரிவு, நாவிதன்வெளி, சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் உஹன ஆகிய பிரதேச செயலகங்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர்களுக்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

108 அரச முகாமைத்துவ உதவியாளர்கள், 17 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், 29 காரியாலய உதவியாளர்கள் மற்றும் 8 சாரதிகள் ஆகியோருக்கே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger