அமைச்சர் ரவூப் ஹக்கீம் பற்றி சிங்கள ஊடகம் ஒன்றில் வெளியான தகவல்
அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிப்பதில்லை எனவும் அரசாங்கத்தினால்
முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்படுவதாக
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பினால் இந்த கடிதம் ஐ.நா பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அரசாங்க தரப்பில் இருந்தே அந்த கடிதம் வழங்கப்பட்டதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரியவந்துள்ளது.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை வெளிநாடுகளும், மனித உரிமை அமைப்புகளுக்கும் யார் வழங்குகிறார்கள் என்பதை கண்டறிய கடந்த சில நாட்களாக அரசாங்கத்திற்கு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்பை வகிக்கும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிரான இந்த கடிதத்தை ஐ.நா பிரதிநிதிகளுக்கு கிடைக்க செய்துள்ளதாக இந்த தேடுதலில் தெரியவந்துள்ளது.
அவர் வேறு யாருமல்ல அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் அந்த அமைச்சர் என்பதும் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. கடந்த காலம் முழுவதும் அமைச்சர் ஹக்கீம் மேற்குலக மற்றும் ஏனைய நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று அரசாங்கம் சம்பந்தமாக கருத்து முரணான பல தகவல்களை வழங்கியிருப்பதாக பின்னர் தெரியவந்தது.
நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர் ஹக்கீம் நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கடும் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளார். இந்த தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவது என அவர் முடிவு செய்துள்ளார்.-TC