<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது


???????????????????????????????
காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் முதியவர் ஒருவரின் சடலம்  இன்று 19-12-2013 வியாழக்கிமை  காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
 புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த அஹமட் இஸ்மாயில் அப்துல் மஜீத் (வயது 63) என்பவரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ரனசிங்க தெரிவித்தார்.
மேற்படி நபர் கடந்த 12.12.2013 அன்று தனது வீட்டில் மரணமடைந்தார். இவரின் சடலம் அன்றையதினமே புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இது ஒரு உண்மைச் சம்பவம் எனும் தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் இவரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத  பரிசோதனை செய்யுமாறு காத்தான்குடி பொலிஸாரிடம் அப்பிரதேச ஊர் மக்கள்; கேட்டுக்கொண்டனர்.
இந்த விடயத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு காத்தான்குடி பொலிஸார் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ் சடலத்தை தோண்டி எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி குறித்த வயோதிபரின் சடலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான்  என்.எம்.அப்துல்லாஹ்  முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
 சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதிவான்  என்.எம்.அப்துல்லாஹ் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டது.
 இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????
???????????????????????????????
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger