<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 'வாழ்வின் ஒளி' பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம்



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டத்தினூடாக பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் வைபவம் இன்று (21) சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.


தேர்தல் காலங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாகுக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச ரீதியாக மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி அவர்களின் வாழ்வை வளமாக்கும்பொருட்டு அம்பாறை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசமாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் பிரதம அதிதியாகவும், கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி எம்.அப்துல் கப்பார்;, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.எம்.முனவ்வர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சாய்ந்தமருது அலுவலகப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.ஏ.மஜீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கொண்டனர்.

இதன்போது பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், இலவச குடிநீர் இணைப்பு மற்றும் மின்பிறபாக்கி என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.



Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger