<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் வீழ்ச்சி -ஆய்வாளர்கள் கருத்து

 



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கு மிகக் கூடியவிரைவில் சரிவு நிலைக்கு வரும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் புதிய முறையான வட்டார முறையில் சட்டமாக்கப்பட்டுள்ளதால் கட்சி என்ற நிலைப்பாட்டை பின்தள்ளி தனிமனித ஆளுமைக்கு முதலிடம் கிடைக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் போட்டியிட்டதால் வெற்றி பெறுகின்ற கூடுதலான பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்வதைவிட கொந்தராத்து செய்து பணம் உழைப்பதிலேயே காலத்தைக்கடத்துகின்றனர்.

கட்சி ஆதரவாளர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கப் போகின்ற சந்தர்ப்பத்தில் அதனைக் கெடுத்து குள்ளநரித்தன வேலைகளில் ஈடுபடுகின்றனர். கட்சியினால் ஏதாவது நன்மை கிடைக்குமாக இருந்தால் அதனை தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதிலேயே கவனமாக உள்ளனர்.

உள்ளொன்றும்,புறமொன்றும் பேசும் கேடுகெட்ட நமது அரசியல் கன்றுக்குட்டிகள் தங்களைவிட்டால் யாரும் இல்லை என்று அரைகுறையோடு உலா வருகின்றார்கள்.
 மக்கள் இன்று தெளிவு பெற்றுவிட்டார்கள். காத்துக்கொண்டிருக்கின்றார்கள் எப்போது வரும் வட்டாரத் தேர்தல் என்று. சுயநலவாதிகளின் போக்கிற்கு முடிவு இல்லாமலா போகும்.

கட்சி ஆதரவாளர்களை பழிவாங்கும் சுயநலக்கூட்டத்தைப்பற்றிய விடயங்களை தலைவர் ரவுப் ஹக்கீமிடம் எடுத்துக்கூறுவதற்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger