<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கடவுச்சீட்டு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கம்

கடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1962 என்ற தொலைபேசி இலக்கமே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வார நாட்களில் காலை 8 மணி முதல் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, கடவுச்சீட்டு உள்ளிட்ட அதனுடன் தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடவுச்சீட்டு, விசா, குடியுரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டமையினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
1962 என்ற இந்த தொலைபேசி இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அழைப்பை ஏற்படுத்தி, எந்தவொரு தகவலையும் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger