<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்வியில் வீழ்ச்சி காணும் கல்முனை ஸாஹிரா கல்லூரி



கல்முனை ஸாஹிறா கல்லூரிக்கு நிரந்த அதிபர் ஒருவரை உடன் நியமிக்குமாறு பிரதேசக் கல்விச் சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பிரதேசக் கல்விச் சமூகம் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.

கல்முனைப் பிராந்தியத்தின் கல்வியின் முதுகெலும்பாக விளங்கும் கல்முனை ஸாஹிரா கல்லூரி தகைமையுள்ள அதிபர் ஒருவர் இன்மையினால் கல்வியில் வீழ்ச்சியைக் கண்டுவருகிறது.

அண்மைக்காலமாக இக்கல்லூரின் நிர்வாகத்தில் நிலவி வரும் சிக்கல் நிலையானது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடங்களை விடவும் அண்மைக்காலமாக தேசிய மட்டப் பரீட்சைகளில் இக்கல்லூரி மாணவர்களின் அடைவு மட்டம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து ஒவ்வொரு வருடமும் வைத்தியத்துறைக்கும் பொறியியல் துறைக்கும் பல மாணவர்கள் இக்கல்லூயிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் இருவர் மாத்திரமே பொறியியல் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது இப்பாடசாலையின் கல்வி வீழ்ச்சிக்கு சிறந்த உதாரணமென கல்விச் சமூகம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger