வாழைச்சேனை அல்-அமீனில் கொள்ளையிடப்பட்ட கணினிகள் மீட்பு; மூன்று சந்தேக நபர்களும் கைது!
--அன்புடன் றின்ஸாத்--
வாழைச்சேனை, காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் கொள்ளையிடப்பட்ட கணினிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய கணினி அறை உடைக்கப்பட்டு, கணினிகள் இரண்டு கொள்ளையிடப்பட்டதாக, பாடசாலை நிறுவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத் துறையினரின் தகவலின் படி, கணினிகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்




