<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியாக என்னை நியமிக்க எத்தனிப்பது மனித உரிமை மீறல். - ஜீ.எம்.எம்.எஸ் அதிபர்


சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக சில இலத்திரணியல் ஊடகங்கள், குறுந்தகவல் ஊடாகவும், இணையத்தளங்கள் ஊடாகவும் செய்திகளை வெளியிட்டு என்னையும் மக்களையும் குழப்பி வருகின்றன.

ஆனால் இது தொடர்பாக இது வரை ( இச்செய்தி பிரசுரமாகும் வரை ) எதுவித அறிவித்தல்களும் எனக்கு கிடைக்கவில்லை. என சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது................
நேற்று மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களது கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற சாய்ந்தமருது கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் என்னை சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியாக  பொறுப்பேக்குமாறு கட்டாயப்படுத்திய போது,

சம்பவ இடத்திலோயே நான் அதிபர் தரம் - 1 ஐச் சேர்ந்தவர் என்றும், இப்பதவியை வகிப்பதற்கு கல்வி நிருவாக சேவை ( SLEAS ) தரத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர் அவர்களே இதற்குப் பொருத்தம் எனவும் கூறி இதனை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்தேன்.
தான் இதற்கு இணங்காவிட்டாலும், எனது பாடசாலையில் பல வருடங்களாக கடமையாற்றிய காரணத்தால் நான் இப்பாடசாலையிலிந்து வெளியேற வேண்டும் என நிற்பந்திக்கப்பட்டது.
நான் இப்பாடசாலை அதிபராக கடமையேற்ற காலப்பகுதிக்குள் பல முன்னேற்றகரமாண வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதேவேளையில் எமது பாடசாலையிலிருந்த திறமையாக கற்பிக்கும் ஆசிரியர்களை பொருத்தமில்லாத காலங்களில் இடமாற்றங்கள் செய்து விட்டு, பாடசாலையின் கல்வி பின்னடைவுக்கு அதிபர் மீது குற்றம் சுமத்தவது எவ்வகையில் நியாயமாகும்?.
அதே வேளை கல்முனை வலயத்தில் என்னை விடவும், பல வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற அதிபர்கள் பலர் இருக்க, எனக்கு மட்டும் இவ்வாரான நியதியைக் கொண்டு வருவதானது யாரை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு?
எமது வலயத்தினுள் சில பாடசாலைகளில் அதிபர் தரம் கிடைத்தும், பல வருடங்களாக எந்த ஓரு பாடசாலையின் பொறுப்புக்களை பெறுப்பேற்காத  அதிபர்களும் உள்ளனர்.

அதேவேளை எமது வலயத்தில் தரம் கூடிய அதிபர்கள் உள்ள நிலையில், அதிபர் தரத்தில் குறைந்த நிலையில் உள்ளவர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன.

இந் நிலையில் என்னை மாத்திரம் குறி வைப்பது எனது அடிப்படை உரிமையை மீறுவதாகவே கருதுகிறேன்.
ஆகையால் இது தொடர்பாக நியாயம் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட உள்ளேன். என கலசம் ஊடக வலையமைப்பிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger