<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

அம்பாறை மாவட்டத்தின் கரையோ கடல் அரிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேங்கள் சமீப காலமாக கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தில்தான் கூடுதலான கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒலுவில் வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியில் வீதி இருந்த இடம் தெரியாமல் முற்றாக அழிவடைந்துள்ளதுடன் அங்கிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் மீனவர்களின் வாடிகள் என்பன அழிந்துள்ளன.
இந்த கடல் அரிப்புக் காரணமாக செழுமையாக இருந்த ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசம் மனித நடமாட்டமற்ற பகுதியாக மாறிவிட்டது. மீனவர்கள் கூட அந்தப் பிரதேசத்தில் உட்கார்ந்து இருந்து பார்ப்பதற்கு ஆசைப்படுகின்றனர். அந்தளவுக்கு ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசம் கடலரிப்புக்குள்ளாகியுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் வெளிச்ச வீடும் கடலரிப்புக்குள்ளாகி சரியும் நிலையில் காணப்படுகின்றது.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரே இந்த பிரதேசத்தில் இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டிருப்பதாக மீனவர்களும்,அந்த பிரதேச மக்களும் தெரிவிக்கின்றனர்.
20131230-173053.jpg
20131230-173058.jpg
20131230-173105.jpg
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger