சாய்ந்தமருதுக்கான பெயர் பலகையை நட்டு எல்லைகளை பாதுகாக்குமாறு ஹரீஸிடம் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை.

சாய்ந்தமருது,
மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் திகாமடுல்லை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான
எச்.எம்.எம். ஹரீஸூக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று(14) மாலை
பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் காலத்துக்கு காலம் அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்நிலை மேலும் தொடராமல் தடுப்பதற்கு,
ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பெயர்ப் பலகையை உடன் நிருவுவதற்கான பணிப்புரையை விடுத்தார்.
மேலும்
சாய்ந்தமருது மத்தியில் காணப்படும் தோனாவை அபிவிருத்தி செய்வதுடன்,
பொலிவேரியன் கிராமத்துக்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலத்தினை
விஸ்தீரணப்படுத்தி கொங்ரீட் பாலமாக மாற்றித்தருமாறும் அத்துடன் அதன்
இடப்புறமாக ஆற்றின் கிழக்குப்புறப் பாதையினை நிர்மாநிக்குமாரும் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
இச்சந்திப்பின்போது
பாராளுமன்ற உறுப்பினரின் 2014ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட
நிதியிலிருந்து சங்கத்தின் பயன்பாட்டுக்கென கணணித்தொகுதி ஒன்றும்
வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினரால் உறுதியளிக்கப்பட்டது.





0 comments:
Post a Comment