<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

ஆஸ்திரேலியாவில் பரபரப்பு : பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதி கைது



மெல்போர்ன்:  ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.ஆஸ்திரேலியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பெண் ஸிப்சி தவுப். இவர் பாரில் நடன பெண்ணாக பணியாற்றினார். பின்னர் நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தார். பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நிர்வாண கிளப் உறுப்பினர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு உறுப்பினர் ஜேம்ஸ் ஸ்மித்தை, ஸிப்சி தவுப் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தங்களது சங்க கொள்கைகளை பிரசாரம் செய்யும் வகையில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்தனர். இதற்கு சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் வழக்கமான திருமண உடையுடனும், தங்களது சங்க உறுப்பினர்களுடனும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான சிட்டி ஹாலுக்கு சென்றனர். அங்கு திடீரென இருவரும் ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றனர். சங்க உறுப்பினர்களும் நிர்வாணமாயினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் இவர்களின் செய்கைகளால் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் குவிந்தனர். தகவல் அறிந்து டிவி கேமராமேன்களும் குவிந்தனர்.இருவரும் வழக்கமான திருமண சடங்கை பொது இடத்தில் நிர்வாணமாக நடத்தி விட்டு ஒருவரை யொருவர் தழுவி முத்தமிட்டனர். பின்னர் இருவரும் கட்டி அணைத்து நடனமாட தொடங்கினர். நிர்வாண கிளப் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கையில் அட்டைகளுடன் கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரையும் மிக பெரிய சால்வையால் மூடினர். பொது இடத்தில் நிர்வாணமாக வந்து இடையூறு செய்த காரணத்துக்காக இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். புதுமண தம்பதி தற்போது சிறையில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger