<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்முனை அரபுக் கல்லூரியில் பயின்றுவரும் வாழைச்சேனை முகம்மது நிப்ராஸ் என்பவரை காணவில்லை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை கோழிக்கடை குறுக்கு வீதியில் வசித்து வந்த முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞரை கடந்த 07.01.2014ம் திகதியில் இருந்து காணவில்லை என்று 12.01.2014ம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அவரது தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி பயின்று வரும் முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞர் விடுமுறையில் வீடு வந்து கடந்த 07.01.2014ம் திகதி காலை 11.30 மணியளவில் கல்முனையில் உள்ள அரபுக் கல்லூரிக்குச் சென்ற தனது மகன் இன்று வரை அங்கு செல்ல வில்லை என்றும் அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாதுள்ளதாகவும் நிப்ராஸின் தாயாரான பாத்திமா றிஸானா தெரிவித்தார்.
தனது மகன் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0777266121 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவரது தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.
20140114-050810.jpg
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger