இறைச்சிக்கடை விசேட அனுமதிப்பத்திர வருமானமாக ஒரேநாளில் 24 லட்சம்; கல்முனை மாநகர வரலாற்றில் முதல் தடவை
கல்முனை மாநகரசபை முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பரால் அறிமுகம்
செய்யப்பட கல்முனை மாட்டிறைச்சிக்கடைகளுக்கான விசேட அனுமதிப்பத்திர
செயல்திட்டம் இன்று, முதல் தடவையாக கல்முனை மாநகரசபைக்குட்பட்ட
சாய்ந்தமருது தவிர்ந்த கல்முனை, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை
ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது.
இதன்போது முதல்நாள் வருமானமாக ரூ. 24 லட்சம் பணமாக கிடைக்கப்பெற்றது. இவ்வாறானதொரு தொகை ஒரேநாளில்
கிடைக்கப்பெற்றது இதுவே முதல்தடவை என முதல்வர் நிஸாம் காரியப்பர்தெரிவித்தார்.
அதே வேளை சாய்ந்தமருதில் இச்செயல் திட்டத்தை அமுல்படுத்த அங்குள்ள மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதால் அதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment