அடுத்த வருடமுதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் மற்றும் மேலதிக சீருடைகள்
அடுத்த வருடமுதல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல
பகுதிகளிலுமுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகளும் மேலதிக சீருடைகளும்
வழங்க கல்விச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கமைய 7
இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதணிகளுக்கும் மேலதிக சீருடைகளுக்கும் அரசாங்கம்
2500 மில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து
சீரடை துணிகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புதிய ஆண்டிலிருந்து உள்ளுரில் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரடை துணிகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் புதிய ஆண்டிலிருந்து உள்ளுரில் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளுர் துணிக்கைத்தொழிலாளர்களை முன்னேற்றும் மஹிந்த
சிந்தனை வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இது நடைமுறையாகும். பாதணிகள் உள்ளுர் தோலினால்
உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம்
உள்ளுர் பாதணி உற்பத்தியாளர்கள் நன்மை பெறவுள்ளதாக அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment