சிவனொளிபாதமலை செல்வதை தவிர்க்கவும்
இன்று தொடக்கம் எதிர்வரும் 5ம் திகதி வரை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்வதை பக்தர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.சிவனொளிபாதமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக சிவனொளிபாதமலை பிரதான தேரர் தெரிவித்துள்ளார்.
அவிருத்தி திட்டத்திற்கென சிவனொளிபாதமலைக்கு விளக்கு, மணிக்கூடு உட்பட்ட 20000 கிலோவிற்கு மேற்பட்ட பொருட்களை 02.01.2013 இன்று லக்ஸபான வாழமலை பிரதேச மைதானத்தில் இருந்து எம்.ஐ 17 என்ற விமானத்தில் குறி;த்த பொருட்களை சிவனொளிபாதமலைக்கு விமானத்தில் விமானப்படையினர் கொண்டு செல்கின்றனர்.
இந்த பொருட்களை 5ம் திகதி வரையும் கொண்டு செல்லப்படவிருப்பதனால் அதுவரை பக்தர்கள் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை மாத்திரமே சிவனொளிபாதமலை செல்ல முடியும் என பிரதான நாயக்க தேரர் பெங்கமுவ தம்மதின்ன தெரிவித்தார்.








0 comments:
Post a Comment