<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

கல்முனையில் 5 மாதங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா தோண்டி எடுக்கப்படுகிறது 

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா ஒன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. சந்தேகத்தின் பெயரில் இது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கல்முனை குடி 11 காசிம் வீதியில் வசித்த 18 வயதுடைய முகம்மது ஹனிபா அஸ்ரின் என்பவர் 2013.07.13 அன்று மரணமாகி அன்றைய தினம் பிற்பகல் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த மரணம் இயற்கை மரணம் அல்லவென்றும் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யபட்டதாகவும் தெரிவித்து ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர்,பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தொடர்ந்து செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இவ்விடயத்தை விசாரிக்க கல்முனை பொலிசார் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியை பெற்றுள்ளனர். நீதிபதி அன்டன் டூச்சன் அவர்களின் உத்தரவுக்கமைய அவரது முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி ,கிராமசேவகர் ,மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் நாளை (02) காலை 10.00 மணிக்கு இந்த ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளது.o
About these ads
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger