தேவாலயங்கள் மீதான தாக்குதல்: 8 பிக்குமார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நேற்று ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குமார் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தினர்.
கல்வாரி தேவாலயம் மற்றும் அசம்பிளி ஒப் கோட் தேவாலயங்களில் காலை ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான அறிக்கை இன்ற காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.





0 comments:
Post a Comment