<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

இலங்கையில் அனைவரும் பௌத்த கலாசாரத்துக்கு உட்பட்டு வாழவேண்டும்-பொதுபல சேனா

இலங்கையின் பாதுகாப்புக்கு முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்ற கருத்தை பொதுபல சேனா என்ற பௌத்த அடிப்படைவாத பிக்குமார் தீவிரமாக எழுப்பி வருவதாக ஏபி செய்திச்சேவை கூறுகிறது. இது 30 வருட கால யுத்தம் முடிவுற்ற நிலையில் இலங்கையின் சமாதானத்துக்கு சவாலாக அமைந்துள்ளது.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வியாபார தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் தலையை மூடி அணியும் உடைகளை தடைசெய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம்கள் சிங்களப் பெண்களை திருமணம் செய்து அவர்களை தமது மதத்துக்கு மாற்றிக் கொள்வதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது. இது நாட்டை பிரிக்கும் நடவடிக்கை என்று அந்த இயக்கம் கூறுகிறது.
2012 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த பௌத்த அமைப்பின் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், இது பௌத்த நாடு, ஏன் பலரும் இதனை பல்கலாசார நாடு என்று பார்க்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைவரும் பௌத்த கலாசாரத்துக்கு உட்பட்டு வாழவேண்டும் என்ற அடிப்படையிலேயே தமது அமைப்பு அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இலங்கை பௌத்த நாடு என்று ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிக்க வேணடாம் என்றும் ஞானசார தேரர் கோரி வருகிறார்.
இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சம் நிலவிய முக்கியமாக போர் நடைபெற்ற காலப்பகுதியில் படைகளில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரிகளில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பதை முஸ்லிம் மாகாணசபை பிரதிநிதியான முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே முஸ்லிம் எவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தம்மை பௌத்த மத காப்பாளராக காட்டிக்கொள்வதற்கும் பௌத்த வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத் தரப்பில் பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பல்கலாசார நாடு ஒன்றில் பொதுபல சேனாவின் செயற்பாடு ஆபத்தானது. எனவே நிலைமையை பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
20140112-154423.jpg
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger