வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவு:-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் மழை அவ்வப்போது பெய்துகொண்டிருக்கிறது.
நாட்டின் வடகிழக்குக் கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கையை அடைந்துள்ளதுடன் காற்றழுத்தம் வடபகுதியை கடக்கும் போது தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி நேற்றைய தினம் கடல் அலை 3மீற்றருக்கு மேல் எழும் என்றும் காற்று 100கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்து.
இன்றும் இருள் மூட்டத்துடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இபெரும்பாலான வீதிகள் வெள்ளக்காடாகவும் மாறியுள்ளன இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடக்கு கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மக்கள் கடும் மழையிலும் குளிரிலும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இவைகளினால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதி மக்களின் நிலமை மிகவும் மோசமாக காணப்படுவதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவு:-
வடக்கில் சீரற்ற காலநிலை தொடர்கின்ற நிலையில் வடக்கு முழுவதுமுள்ள கரையோரப் பாடசாலைகளை மூட ஆளுநர் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய கரையோரப் பாடசாலைகளிற்கும் இன்று திங்கட்கிழமை (06.01.14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அந்தந்த கல்வி வலயப் பணிப்பாளர்களுக்கு தான் அறிவித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை (06.01.14) பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கரையோர மக்களை அவதானம்: இடர் முகாமைத்துவ நிலையம்
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புத்தளம், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் அதேவேளை காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாழமுக்க நிலைமையினால் குறித்த பகுதிகளில் பெய்த மழை குறைவடைந்துள்ள போதிலும் இன்று மாலை வரை விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கடற்கரையை அண்மித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்ட மக்களை இன்று மாலை வரை அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் வடக்கு கடற்பரப்பு கொந்தளிப்புடன் அபாயகரமானதாக காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் இன்று மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. கடற் பிரதேசம் தொடர்ந்தும் கொந்தளிப்பாகவே காணப்படுகின்றது.

0 comments:
Post a Comment