<div style='background-color: none transparent;'></div>

online


counters
Home » »

பாலியல் வல்லுறவுக்கு இணங்க மறுத்த பெண்ணொருவருக்கு காதலன் முன்னிலையில் மார்பகங்களில் சூடு


பாலியல் வல்லுறவுக்கு இணங்க மறுத்த பெண்ணொருவர் அவரது வருங்கால கணவர் முன்னிலையிலேயே மார்பகங்களில் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவமொன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பலத்த காயங்களுக்குள்ளான இந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதி ஒன்றில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்தபோதே அவர்களது அறைக்குள் நுழைந்த இளைஞர்கள் குழு குறித்த பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இணங்க மறுத்ததையடுத்து சிகரட்டினால் மார்பகங்கள் சுடப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
கடந்த 31 ஆம் திகதி  இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினமே கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவதாவது
சம்பவ தினம் கொழும்பு பகுதியிலிருந்து கம்பளை வெடகேதெனிய பகுதியில் அமைந்துள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அவரின் வருங்கால கணவர் தாம் கடமையின் நிமித்தம் அதிகாலையிலேயே கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளதால் சம்பவ தினம் இரவு அப்பெண்ணுடன் கம்பளை தொழுவ வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அதே விடுதியில் மறுபுறத்தில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று அப்பெண்ணிருந்த அறைக்குள் அத்துமீறி பிரவேசித்து அவரின் வருங்கால கணவர் முன்னிலையிலேயே பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதை தடுக்க முற்பட்ட அவரது வருங்கால கால கணவரை தாக்கியுள்ளதுடன் தங்கள் ஆசைக்கு இணங்க மறுத்த அந்தப் பெண்ணின் மார்பகங்களை சிகரட்டினால் சுட்டு காயப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து காயங்களுக்களாகிய பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து தான் நடவடிக்கையெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. . . All Rights Reserved
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Modify by Creating Website. Inpire by Darkmatter Rockettheme Proudly powered by Blogger