கல்முனைக் கசாப்புக் கடைக்காரர்களின் ஆதங்கம்.
கல்முனை
மாநகர சபை பிரதேசங்களிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளுக்கு
அனுமதிப்பத்திரம் வழங்கி அதன் மூலம் இலட்சக்கணக்கில் வருமானத்தைத்
தேடியுள்ளதாக பெருமையுடன் ஊடகங்களுக்கு அறிவிக்கும் கல்முனை மாநகர சபை
இவ்வாறு வருமானமாகப் பெறும் பணத்தில் இப்பிரதேசத்தில்
சுகாதார முறையில் வசதியாக மாடுகளை அறுப்பதற்கு மாட்டு மடுவங்கள்
(கசாப்புக்கிடங்கு)
இதுவரையும் அமைப்பதற்கு நடவடிக்கைகள்
எடுப்பதாக இல்லை என இப்பிரதேச கசாப்புக்
கடைக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாநகர சபைக்கு இறைச்சிக் கடைகளுக்காக அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு இலட்சக் கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு மாடு அறுப்பதற்கு இச்சபையால் வசதிகள் செய்து தராமல் எமது மாடுகளை தனியாரின் இடத்தில் அறுப்பதற்கு மேலும் பணம் கொடுத்து அவ்விடத்தில் அறுப்பது என்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளிக் கிராமத்திலுள்ள ஒரே ஒரு
மாட்டிறைச்சிக் கடைக்கு மட்டும்
ஆற்றோரத்தில் வசதியான மாட்டு மடுவம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் சம்மாந்துறை
பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு தமது மாடுகளை சுகாதார
வசதிகளுடன் அறுப்பதற்கு சகல வசதிகளும் பொருந்திய மாட்டு மடுவம் பல இலட்சம் ரூபா
செலவில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஏன் கல்முனைப் பிரதேசத்திலுள்ள மருதமுனை
நற்பிட்டிமுனை கல்முனைக்குடி சாய்ந்தமருது அகிய ஊர்களிலுள்ள கசாப்புக்
கடைக்காரர்களுக்கு இதுவரையும் வசதியான மாட்டு மடுவங்கள் அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் வினா எழுப்புகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் முதலாவது முதல்வர் அஜ்மீர் தொடக்கம் எச்.எம்.எம்.ஹரீஸ் மசூர் மெளலானா சிராஸ் மீராசாஹீப் ஆகிய முதல்வர்களிடம் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தும் அவர்கள் எங்களிடம் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி அதன் மூலம் இலட்சக் கணக்கில் வருமானத்தை தேடுவதில் ஆர்வம் காட்டினார்களே தவிர எங்களால் பெறப்பட்ட வருமானத்தில் எமக்கு மாடுகளை அறுப்பதற்கு அவசியம் தேவையான சுகாதார வசதிகள் உள்ள மாட்டு மடுவங்களை அமைத்துத் தருவதில் அக்கறை செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதில் மட்டும் 10 இறைச்சிக்கடகள் இருக்கின்றன. பிரதான வீதியிலுள்ள இறைச்சிக்கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு ஒரு கடைக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஊரின் உள் வீதியிலுள்ள இறைச்சி கடைகளுக்கு 75 ஆயிரமும் செலுத்திவிட்டு ஏன் நாங்கள் தனியார் ஒருவர் கழிவுகளைச் சேகரிப்பதற்காக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ள இடத்தில் ஒரு மாட்டுக்கு ரூபா 200/= செலுத்தி மாடுகளை அறுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவளை கடந்த காலங்களில் இறைச்சிக் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக பத்திரிகைகள் பொதுமக்கள் கூடும் பள்ளிவாசல் போன்ற இடங்களில் பகிரங்கமாக அறிவித்தல் செய்வார்கள். ஆனால் இந்த தடவை அவ்வாறு அறிவிப்புச் செய்யாமல் இறைச்சிக் கடைகளுக்கான அனுமதிக் கட்டணங்களை அவர்களே தீர்மானித்து குறிப்பிட்ட தினத்திற்குள் பணத்தைச் செலுத்தி கடைகளுக்கான அனுமதிப் பத்திரம் பெறாவிட்டால் ஏனைய ஒருவருக்கு அந்தக் கடை வழங்கப்படும் என்று வலுக்கட்டாயப்படுத்தியதன் நிமித்தம் எங்களுக்கு வேறு தொழில் செய்ய முடியாது என்ற அச்சம் காரணமாகவே இந்த அதிகரித்த தொகையைக் கொடுத்து இறைச்சிக் கடைகளை எடுத்துள்ளோம்.அவர்களின் விசேட நடைமுறையால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும் கசாப்புக் கடைக்காரர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.





0 comments:
Post a Comment