பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை...!
தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிய – வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் முதல் தந்தை தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக 17 வயதான மகள் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் இதுவரை நாடு திரும்பவில்லை.
தனது தந்தைக்கு எதிராக மகளினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.






0 comments:
Post a Comment