மட்டக்களப்பு நகரை அச்சுருத்தும் பாரிய இரண்டு முதலைகள் முதலைகள்!(photos)
மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சிலை மைதானத்தை அண்டியிருக்கும் வாவிக்கரையில் சுற்றித்திரியும் முதலைகள் குறித்த ஏற்கனவே எமது இணையத்தளம் ஊடாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று(02.01.2014) காலை மட்டக்களப்பு நகர் புதுப் பாலத்துக்கு அருகில் மீண்டும் பாரிய இரண்டு முதலைகள் மீனவர்களை அச்சுருத்தும் வகையில் சுற்றித்திரிந்தன.
மேற்படி முதலைகளின் நடமாட்டம் காரணமாக இப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் வாவியில் இருந்து வெளியேரியதுடன், இந்த முதலைகளின் நடமாட்டம் தங்களது மீன்பிடித் தொழிலுக்கு பாரிய அச்சுருத்தலாக உள்ளதுடன் வாவியில் மீன்பிடிக்கும் தங்களை இந்த முதலைகள் எப்போதும் தாக்கலாம் எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





0 comments:
Post a Comment