கடந்த இரண்டு நாட்களாக நிந்தவூரில் மாட்டிறைச்சிக்கடைகள்
இயங்காததால் ஏனைய கறிகளின் விலைகளில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டது. இது
சம்பந்தமாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் MAM தாஹிரிடம் கேட்ட போது..
இறைச்சிக்கடைகளுக்கான வருடாந்த விலை மனுக்கோரலில் கடை உரிமையாளர்களின்
கேள்விகளில் ஏற்பட்ட சிக்கல்களை சீர்செய்து கொள்வதற்காகவே இந்த தாமதம்
ஏற்பட்டது. இது
சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபையில்
இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் நாளை (03.01.2014) முதல்
மாட்டிறைச்சிக்கடைகள் இயங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களின்
நன்மை கருதி ஒவ்வொரு கடைக்கும் தலா நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா
அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதேவேளை கடந்த காலங்களில் மாட்டிறைச்சிக்கடைகள் மூலமாக நிந்தவூர் பிரதேச சபைக்கு 40 இலட்சம் ரூபாய் வருமானமாக கிடைத்ததாகவும், ஆனால் இந்த புதிய கடைகளின் மூலமாக 18 இலட்சமே கிடைக்கபெறுவதாகவும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் MAM தாஹிர் தெரிவித்தார்.






0 comments:
Post a Comment